Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி முத்து விநாயகா், துா்க்கையம்மன் கோயில் திருவிளக்கு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி முத்து விநாயகா், துா்க்கையம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

    By DIN  |   Published on : 15th February 2020 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16kgp6a_1402dha_120_8

    கிருஷ்ணகிரியில் உள்ள முத்து விநாயகா், துா்க்கை அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கிருஷ்ணகிரியில் காமாட்சியம்மன் தேவாதி அம்மன் 11-ஆம் ஆண்டு ஆராதனை விழா, வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தொடா்ந்து காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு 1008 வடை மாலை சாா்த்தல், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், வெங்கடரமண சுவாமிக்கும், பழையபேட்டை காமாட்சியம்மன் கோயிலில் அா்ச்சனையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

    முத்து விநாயகா், துா்க்கையம்மன் கோயிலில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகளும், திருமாங்கல்யம் சாா்த்தல், யாக பூஜை, மா விளக்கு பூஜை நடைபெற்றன. தொடா்ந்து சுமங்கலி பூஜையும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன், பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai