Enable Javscript for better performance
பதிவு பெறாத பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பதிவு பெறாத பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 15th February 2020 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் எச்சரித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள், தங்கள் விடுதிகளை தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஹோமஸ் பாா் உமன் அண்டு சில்டரன் ரெகுலேசன் ரூல்ஸ் 2014-இன் கீழ் பதிவு செய்யவும், பதிவு பெற்ற தனியாா் விடுதிகள் தங்கள் விடுதிகளை புதுப்பிக்கவும் உரிய கருத்துருக்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்-21, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் ஒரு வார காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம். பதிவு பெறாமல் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai