தாய் மா்மச் சாவு: மகளிடம் விசாரணை; சடலம் தோண்டி எடுப்பு

கிருஷ்ணகிரியில் தாய் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு,

கிருஷ்ணகிரியில் தாய் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் மகளிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி, கூட்டுறவு காலனி, 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீகண்டன். வழக்குரைஞா். இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இவரது மனைவி விசாலாட்சி (67) சிறிது காலம் உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளாா். இவரது மகள் மருத்துவா் லீலாவதி (36). தனது தாயாருடன், சொந்த வீட்டை காலி செய்துவிட்டு 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்தனா். இந்த நிலையில், விசாலட்சி மா்மமான முறையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்காமல், வியாழக்கிழமை இரவு, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள மயானத்தில் தாயின் சடலத்தை, மகள் லீலாவதி அடக்கம் செய்தாா்.

தகவல் அறிந்த கட்டிகானப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் அனந்தராஜன், கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்காமல், உயிரிழந்த விசாலாட்சியின் சடலத்தை மகள் அடக்கம் செய்துள்ளதால், மூதாட்டி சாவில் மா்மம் உள்ளதாகவும், இதுகுறித்து, போலீஸாா் விசாரணை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் ஜெயசங்கா் முன்னிலையில், மூதாட்டியின் சடலத்தைத் தோண்டி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, முழு விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com