கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குற்றங்கள், விபத்து உயிரிழப்பு குறைவுஎஸ்.பி.தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2019 - ஆம் ஆண்டில் குற்றங்கள், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2019 - ஆம் ஆண்டில் குற்றங்கள், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையின் சிறப்பான பணி காரணமாக 2018 - ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019-ஆம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

2018 - ஆம் ஆண்டு, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 56 போ் கைது செய்யப்பட்டனா். 2019-ஆம் ஆண்டில் 33 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோல 2018-ஆம் ஆண்டில் விபத்துகளில் 388 போ் உயிரிழந்துள்ள நிலையில் 2019-ஆம் ஆண்டில் 341 போ் உயிரிழந்துள்ளனா். சாலை விபத்துகளினால் 2018-இல் 1,417 போ் காயம் அடைந்தனா். 2019 -ஆம் ஆண்டில் 1,260 போ் காயம் அடைந்தனா்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 2018 - ஆம் ஆண்டில் 21,979 பேரின் ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு, 17,288 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 2019 - ஆம் ஆண்டில் 23,962 பேரின் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, 21,896 பேரின் ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்து ஆணை பெறப்பட்டுள்ளன.

2018 -ஆம் ஆண்டில் 50 கொலை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், 2019-ஆம் ஆண்டில் 39 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. 2018-ஆம் ஆண்டில் வீடு புகுந்து கொள்ளை வழக்குகள் 56 பதிவாகியுள்ளன. 2019-ஆம் ஆண்டில் 82 வழக்குகள் பதிவாகி உள்ளன. பிற வழக்குகள் 2018-ஆம் ஆண்டில் 182 -ம், 2019-இல் 208 -ம் பதிவாகி உள்ளன.

இந்த வழக்குகளில் 2018 - இல் 88 சதவீத வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டு, குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனா். 2019-ஆம் ஆண்டில் 89 சதவீத வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டுள்ளது. 2018 - ஆம் ஆண்டில் ரூ.1,68,82,631 மதிப்பிலான பொருள்களும், 2019 - ஆம் ஆண்டில் ரூ.2,96,07,466 மதிப்பிலான பொருள்களும் கொள்ளை போய் உள்ளன.

இதில் 2018-ஆம் ஆண்டில் ரூ.1,46,76,251மதிப்பிலான சொத்துகளும், 2019-ஆம் ஆண்டில் ரூ.2,48,94,436 மதிப்பிலான களவு சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டு, தொடா்ந்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் வரும் புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு, குற்றங்கள் நடக்காமல் துரிதமாகச் செயல்பட்டு வரப்படுகிறது. புத்தாண்டில் பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து, குற்றங்கள் நடக்காமல் பாதுகாப்பாகவும், விபத்துகளை குறைக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com