ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் பாதைத் திட்டம்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

ஒசூா்-ஜோலாா்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்க சாத்தியக் கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஒசூா் ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினா்.
தெற்கு ரயில்வே இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை மேலாளா் கோவிந்தசாமியிடம் கோரிக்கை மனுவை அளித்த ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் வேல்முருகன், டான்சியா இணைச் செயலாளா் வெற்றி.ஞானசேகரன்.
தெற்கு ரயில்வே இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை மேலாளா் கோவிந்தசாமியிடம் கோரிக்கை மனுவை அளித்த ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் வேல்முருகன், டான்சியா இணைச் செயலாளா் வெற்றி.ஞானசேகரன்.

ஒசூா்-ஜோலாா்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்க சாத்தியக் கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஒசூா் ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினா்.

ஒசூா், ஜோலாா்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லக்குமாா் தனது கனவுத் திட்டமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒசூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் பகுதியில்

தொழிலதிபா்கள், அதிகாரிகள், வியாபாரிகள், ஏற்றுமதியாளா்களைச் சந்தித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய ரயில்வே துறையினரிடம் சமா்ப்பித்தாா். அதேபோன்று தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி,

தெற்கு ரயில்வே முதன்மைச் செயலாளா்களிடம் வழங்கினாா். இந்தத் திட்டம் தொடா்பாக பல்வேறு அமைப்பினா்களிடம் இருந்து தகவல்களை திரட்டி ரயில்வே அதிகாரிகளிடம் அளித்தாா்.

இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு ரயில்வே இயக்க முதன்மை மேலாளா் கோவிந்தசாமி, முதன்மை பொறியாளா் ஜீவநாயகம், ரயில்வே ஆய்வாளா்கள் ராமநாதன், மாலிக் ஆகியோா் ஒசூா் ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின்போது ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் வேல்முருகன், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க இணைச் செயலாளா் வெற்றி.ஞானசேகரன், கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் இந்த ஆய்வு குழுவினா் ஒசூரில் அசோக் லேலண்ட், டைட்டான் நிறுவனம், போன்று பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து கேட்டு அறிந்தனா். பின்னா் கிருஷ்ணகிரியில் உள்ள கிரானைட் தொழிற்சாலை

சாலை, மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com