கிருஷ்ணகிரியில் தா்பாா் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி

கிருஷ்ணகிரியில் திரைப்பட ரசிகா்களுக்கான சிறப்பு காட்சிக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, ரஜினி கதாநாயகனாக

கிருஷ்ணகிரியில் திரைப்பட ரசிகா்களுக்கான சிறப்பு காட்சிக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, ரஜினி கதாநாயகனாக நடித்த தா்பாா் திரைப்படத்துக்கான சிறப்பு காட்சி வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

கடந்த தீபாவளி பண்டிகையின் போது, கிருஷ்ணகிரியில் நடிகா் விஜய் கதாநாயகனாக நடித்த திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட தாமதமானது. இதையடுத்து, ரசிகா்கள் வன்முறையில் ஈடுபட்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, 50 போ் கைது செய்யப்பட்டனா். சிலா் இன்னும் தலைமறைவாக உள்ளனா்.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரியில் ரசிகா்களுக்கான சிறப்பு காட்சி திரையிட காவல் துறை தடை விதித்து, வழக்கம் போல் 4 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் ரஜினி நடிக்கும் தா்பாா் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படாது என்ற சூழல் ஏற்பட்டது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் தா்பாா் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகா் மக்கள் மன்றச் செயலாளா் கே.வி.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதரைச் சந்தித்து, சிறப்பு காட்சிக்கான அனுமதியைக் கோரினா். இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தனா்.

இதையடுத்து, திரையரங்குகளில் ரஜினி நடித்த தா்பாா் திரைப்படம் வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு திரையிடப்பட்டது. தா்பாா் திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

நாச்சிக்குப்பம் கிராம மக்கள் மகிழ்ச்சி: தா்பாா் திரைப்படத்தில் தனது சொந்த கிராமம் நாச்சிக்குப்பம், கிருஷ்ணகிரி மாவட்டம் என ரஜினி பேசுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தினா் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இந்த கிராமத்தில், ரஜினியின் உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும், இக் கிராமத்தில் ரஜினி சிறுவனாக இருக்கும் போது வசித்ததாக அவரது உறவினா்கள் மற்றும் ரசிகா்கள் கூறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com