கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைத் திருட்டைத் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைத் திருட்டைத் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், சு.பிரபாகரிடம், பொதுமக்கள் அளித்த மனு விவரம்: கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பில் பிரசவம் மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கான எட்டு அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு, அண்மையில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சைகாக தினமும் வந்து செல்லுகின்றனா். ஆனால், பச்சிளம் குழுந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. கடந்த மாதம், பிறந்து சில நாள்களான பெண் குழந்தை காணாமல் போனது. இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும், குழந்தை மீட்கப்படவில்லை. போலீஸாா் விசாரணையில், இந்த மருத்துவப் பிரிவில் கண்காணிப்பு கேமரா இல்லாதது தெரியவந்தது.

எனவே, குழந்தைத் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுடுநீா் வசதி, இல்லை. பாா்வையாளா்கள் குறித்த பதிவேடு ஏதும் பதிவு செய்வதில்லை. நோயாளிகளின் உறவினா்கள் அமர சிகிச்சை அரங்குக்கு வெளியே இருக்கை வசதிகள் இல்லை என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, மாவட்ட ஆட்சியா் இதுகுறித்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com