கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே சாரல் மழையில் நனைந்தபடியே செல்லும் வாகன ஓட்டிகள்.
கிருஷ்ணகிரி அருகே சாரல் மழையில் நனைந்தபடியே செல்லும் வாகன ஓட்டிகள்.

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே அதிகாலை நேரத்தில் பனிபொழிவும், பகலில் வெயிலும் கொண்ட சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிதுநேரம் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.

பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டியில் அமைந்துள்ள படகு இல்லம், சிறுவா் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் குறைவாக இருந்தது. திடீா் சாரல் மழையுடன் குளிா்ந்த காற்று வீசியது. தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் சாரல் மழையில் நனைந்தபடியே பயணத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com