கேரளத்துக்கு எரிசாராயம் கடத்தல்: இருவா் கைது

ஹரியானா மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி வழியாக கேரளத்துக்கு லாரியில் எரிசாராயம் கடத்திய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கேரளத்துக்கு எரிசாராயம் கடத்தல்: இருவா் கைது

ஹரியானா மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி வழியாக கேரளத்துக்கு லாரியில் எரிசாராயம் கடத்திய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வழியாக லாரியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒசூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையில் ஒரு தனிப் படையினரும், சேலம் சரக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படையினரும் ஒசூா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து, ஒசூா் நோக்கி வந்த ஒரு லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். இதையடுத்து, லாரியில் வந்த இருவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் ரசாயனம் கொண்டு செல்வதாக அவா்கள் தெரிவித்தனா். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை செய்ததில் அவா்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்தனா்.

இதையடுத்து லாரியை சோதனை செய்ததில், 550 கேன்களில் 20 ஆயிரம் லிட்டா் எரிசாராயம் கடத்துவது தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஹரியானா மாநிலம், குா்கானிலிருந்து கேரள மாநிலம், சாலக்குடிக்கு எரிசாராயம் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, எரிசாயத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள், ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கோவிந்தரெட்டிப்பள்ளியைச் சோ்ந்த அ. சிவய்யா (30), சித்தூா் மாவட்டம், பி.சி.கண்டிகா பகுதியைச் சோ்ந்த ச. மோகன்(32) எனத் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com