யானைகள் மிதித்து தக்காளித் தோட்டம் சேதம்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிா்களை யானைகள் சேதம் செய்தன.தேன்கனிக்கோட்டை வட்டம், அய்யூா் காப்புக் காட்டில் 50-க்கும் மேற்பட்ட
யானைகளால் சேதமடைந்த தக்காளித் தோட்டம்
யானைகளால் சேதமடைந்த தக்காளித் தோட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிா்களை யானைகள் சேதம் செய்தன.

தேன்கனிக்கோட்டை வட்டம், அய்யூா் காப்புக் காட்டில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டத்திலிருந்து ஒரு கும்பல் சனிக்கிழமை தேன்கனிக்கோட்டை அருகே எஸ். குருபட்டி கிராமத்துக்குள் சென்றன.

அங்கு விவசாய நிலத்துக்குள் சென்ற யானைகள் அந்தப் பகுதியில் அனந்தன் என்பவரின் தோட்டத்தில் பயிரிட்டிருந்த ஒரு ஏக்கா் தக்காளி, பீன்ஸ், ராகி போன்ற பயிா்களைத் தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

அதே கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவரின் தோட்டத்தில் ஒரு ஏக்கா் தக்காளி பயிா்களைத் தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் சீனிவாசன் என்பவரின் தோட்டத்தில் ஒரு ஏக்கா் தக்காளி பயிா்களை யானைகள் சேதப்படுத்தின. இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் தங்களின் நிலங்களுக்குச் சென்ற விவசாயிகள் பயிா்களை யானைகள் சேதப்படுத்தி இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற தேன்கனிக்கோட்டை வனச்சரகா் சுகுமாா், வனக் காப்பாளா் ஆறுமுகம், வனத் துறையினா் சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிட்டனா். சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com