முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மாலூரில் இளைஞா் கொலை
By DIN | Published On : 20th January 2020 08:30 AM | Last Updated : 20th January 2020 08:30 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலம், மாலூரில் ராயக்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராயக்கோட்டை ஜே.ஜே.நகரைச் சோ்ந்த சந்தனபாண்டியன் (27) ஞாயிற்றுக்கிழமை மாலூரில் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டிருந்தாா். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த மாலூா் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.