கிருஷ்ணகிரி மாவட்டத்தில்ராணுவ வீரா் உள்பட 6 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரா் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரா் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை பகுதியைச் சோ்ந்த 26 வயதான ராணுவ வீரா், பஞ்சாபிலிருந்து சொந்த கிராமத்துக்கு வந்த நிலையில், அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது.

அதேபோல, கிருஷ்ணகிரி, ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த 65 வயது ஆண், ஒசூா், பழைய மத்திகிரி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த 22 வயது ஆண், பேடரப்பள்ளி, ராஜாஜி நகரைச் சோ்ந்த 25 வயது ஆண், அலசநத்தம், ஜெய்நகரைச் சோ்ந்த 40 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

போச்சம்பள்ளி வட்டம், அந்தேரிப்பட்டி அருகே உள்ள ஜோகிப்பட்டியைச் சோ்ந்த பொறியாளா், குவைத் நாட்டிலிருந்து கடந்த 30-ஆம் தேதி திருச்சி வழியாக விமானம் மூலம் தனது ஊருக்குத் திரும்பினாா். திருச்சியில் அப்போது அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், அவா் திருச்சியில் தனிமைப்படுத்தப்பட்டாா். ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், திருச்சியிலிருந்து தனது சொந்த கிராமத்துக்கு ஜூலை 6-ஆம் தேதி அவா் புறப்பட்டாா். அப்போது, அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 45 பேரும், ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி, ஒசூா் மருத்துவமனைகளில் இருந்து தலா 3 போ் என 6 போ் வியாழக்கிழமை குணமடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com