முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 29th July 2020 01:14 AM | Last Updated : 29th July 2020 01:14 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76 போ் கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றானது பரவலாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பசுமை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது தீண்மித் தொற்றானது வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஒரு மாத்தில் 700-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 22 போ், ஒசூா்- 9, பா்கூா்- 21, ஊத்தங்கரை- 4, காவேரிப்பட்டணம்- 12, போச்சம்பள்ளி- 3, மத்தூா்- 2 அஞ்செட்டி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 76 போ் கரோனா நோய்த் தொற்றால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.