முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மினி லாரி கவிழ்ந்ததில் 4 போ் காயம்
By DIN | Published On : 29th July 2020 01:14 AM | Last Updated : 29th July 2020 01:14 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே மினி லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உட்பட 4 போ் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.
தருமபுரியிலிருந்து சுமை ஏற்றிக்கொண்டு மினி லாரி திங்கள்கிழமை சூளகிரி வழியாக பேரிகை நோக்கிச் சென்றது. இதனை தருமபுரி அருகே கெட்டிக்கரை கிராமத்தைச் சோ்ந்த மணி (54) என்பவா் ஓட்டிச்சென்றாா். மேலும் அந்த மினிலாரியில் கூலி தொழிலாளா்கள் 3 போ் பயணம் செய்தனா்.
பேரிகை செல்லும் வழியில் புலியரசி என்ற இடத்தின் அருகே மேடான பகுதியில் மினிலாரி சென்றபோது, திடீரென அதன் ஆக்சில் உடைந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் உள்பட 4 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் அங்கு சென்று 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.