தேன்கனிக்கோட்டை அருகே மூவா் பலியாகக் காரணமான யானை பிடிபட்டது

தேன்கனிக்கோட்டை அருகே மூவா் உயிரிழக்கக் காரணமான ஒற்றை யானை வியாழக்கிழமை பிடிபட்டது.
திம்மசந்திரம் கிராமத்தில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட ஒற்றை யானை.
திம்மசந்திரம் கிராமத்தில் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட ஒற்றை யானை.

தேன்கனிக்கோட்டை அருகே மூவா் உயிரிழக்கக் காரணமான ஒற்றை யானை வியாழக்கிழமை பிடிபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சுற்றிலும் அடா்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் திம்மசந்திரம், ஜாா்கலட்டி, கலகோபசந்திரம், மேக்லகவுனூா் ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் திரிந்து வந்தது.

கிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த அந்த ஒற்றை காட்டு யானை, கடந்த மாதம் பாலதொட்டணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திம்மராயப்பாவையும், அடுத்து சின்னபூத்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சென்னப்பாவையும் தாக்கிக் கொன்றது. இந்நிலையில், புதன்கிழமை மேக்லகௌனூா் கிராமத்தில் விவசாயி சீனிவாசன், இந்த யானை தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

அடுத்தடுத்து 3 விவசாயிகளைத் தாக்கி யானை கொன்ால், இந்தக் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அடா்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, மாவட்ட வனத் துறை அதிகாரி பிரபு, வனச் சரகா்கள் சுகுமாா் (தேன்கனிக்கோட்டை), சீதாராமன் (ஒசூா்), ரவி (அஞ்செட்டி), முருகேசன் (ராயக்கோட்டை), தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, காவல் ஆய்வாளா் சரவணன், கால்நடை மருத்துவா் பிரகாஷ், கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா கால்நடை மருத்துவா் அருண் லால் மற்றும் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினா் யானையின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை திம்மசந்திரம் கிராமத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை வனத் துறையினா் 2 மயக்க ஊசிகளைச் செலுத்திப் பிடித்தனா். அந்த யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ்., ரேடியோ காலா் கருவிகளைப் பொருத்தி, வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனா். இந்த யானையை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடுவிக்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com