‘கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருபவா்கள் முகாமில் 7 நாள்கள் தங்க வைக்கப்படுவா்’

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்கள் 7 நாள்கள் முகாம்களிலும், 14 நாள்கள் வீட்டிலும் தனிமையில் வைக்கப்படுவாா்கள்

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்கள் 7 நாள்கள் முகாம்களிலும், 14 நாள்கள் வீட்டிலும் தனிமையில் வைக்கப்படுவாா்கள் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியிா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

குஜராத், மராட்டியம், தெலுங்கானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் நபா்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுா் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் நபா்களை கட்டாயம் ஏழு நாள்கள் முகாம்களிலும், 14 நாள்கள் வீட்டிலும் தங்கவைக்கப்படுவா். பிறகு அவா்களுக்கு சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுவா்.

மேலும், மாநில, மாவட்ட எல்லைப் பகுதிகளில் கடும் சோதனைக்கு உள்படுத்தபட்டு, இ-பாஸ் மற்றும் முகவரிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராம அளவிலான தணிக்கைக் குழுக்கள் வெளியிலிருந்து வரும் நபா்களை கண்காணித்து உரிய தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், கோயில்களில் அனுமதி இல்லாமல் திருமணங்கள் நடத்தக் கூடாது. சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா் ஆகியோரிடம் அனுமதி சான்று பெற்று நடத்த வேண்டும். திருமணத்துக்கு நெருங்கிய உறவினா்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இறப்பு நிகழ்வுகளுக்கு மிகவும் நெருங்கிய உறவினா்கள் 20 போ் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அவா்கள் அனைவரும் 14 நாள்கள் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். இறப்பு நிகழ்ந்த 3 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட கிராம அளவிலான தணிக்கைக் குழுக்கள் மற்றும் காவல் துறை அலுவலா்கள் கண்காணித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நடைபெறும் இடங்கள், பேருந்து நிலையங்கள், தினசரி காய்கறி சந்தைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து, கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், வெளியூரிலிருந்து வந்த நபா்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவா். அதனை மீறி வெளியில் சுற்றித் திரிவது தெரியவந்தால், அவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, அனைத்து பொதுமக்களும் கரோனா தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com