தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிய மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்ற வாகனம் மீட்பு

சாமல்பட்டி இரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிய மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்ற வாகனம் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. 
தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிய மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்ற வாகனம் மீட்பு

சாமல்பட்டி இரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிய மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்ற வாகனம் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி இரயில்வே தரைபாலத்தில் மழைநீர் வெளியேராமல் தேங்கியதால் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழைக்கு தரைப்பாலத்தில் சுமார் 6 அடி அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மத்தூரில் இருந்து ஊத்தங்கரை நோக்கி அரசு வாகனத்தில் வந்த மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துரைராஜ் திட்டம் வெங்கட்ராம கணேஷ், உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ஆகிய நான்கு பேர் தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிக்கொண்டனர். 

இடுப்பளவு தண்ணீரில் சிக்கிக்கொண்டதால் அருகில் யாரும் செல்லாமல் இரண்டு மணி நேரம் உள்ளே இருந்தனர், பிறகு அப்பகுதியில் உள்ள தன்னார்வலர் லயோலா ராஜசேகர், மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து டிராக்டரில் கயிறுகட்டி அவர்கள் சென்ற வாகனத்தை மீட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டார சாமல்பட்டி, காரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கன மழை பெய்தது. பெய்த கனமழையினால் சாமல்பட்டி தரை பாலத்தில் இரவு 3 மணிமுதலே மழைநீர் அதிக அளவு தேங்கி காணப்பட்டது.

தினசரி பெங்களூரு - பாண்டிச்சேரி வரை பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாகதான் கடந்து செல்கின்றது. இதனால் ஊத்தங்கரை வழியாக சாமல்பட்டியை கடந்து பெங்களூரு செல்லும் வாகனங்களும், புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களும் இவ்வழியாக செல்ல முடியாமல் தண்ணீரில் ஊர்ந்து சென்றது. மேலும் இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் செல்லாமல் காத்து கிடக்கின்றது. மழை நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட பிறகு தான்  வாகனங்கள் செல்ல முடியும். 

மழைக்காலங்களில் தரை பாலத்தில் இது போல் தண்ணீர் தேங்குவதை கட்டுப்படுத்தவும், தண்ணீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com