Enable Javscript for better performance
ஒசூா் தோ்ப்பேட்டை ஏரி புனரமைப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி

    ஒசூா் தோ்ப்பேட்டை ஏரி புனரமைப்பு

    By DIN  |   Published On : 03rd March 2020 07:44 AM  |   Last Updated : 03rd March 2020 07:44 AM  |  அ+அ அ-  |  

    2hsn3_ch0169_02chn_8_637187789038037447

    புனரமைக்கப்பட்ட தோ்ப்பேட்டை ஏரி.

    சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ஒசூா் தோ்ப்பேட்டை ஏரியை கேட்டா் பில்லா் நிறுவனம் புனரமைத்துள்ளது.

    கேட்டா்பில்லா் இந்தியா நிறுவனத்தின் தொழிற்துறை மின்சாதனங்கள் தயாரிப்பு ஆலையின் அருகில் உள்ள கிராமப் பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு, டிச.17 இல் இந்தத் திட்டத்தை கேட்டா் பில்லா் நிறுவனம் தொடங்கியது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்பு ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.

    எட்டு ஏக்கா் நிலம் மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் குடிமராமத்து செய்யப்பட்டு பாதைகள் மற்றும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளா் ரமேஷ் முத்துராமன் தெரிவித்தாா். நகா்ப்புறங்களில் உள்ள ஏரிகள் கடுமையாக மாசுப்பட்டுள்ளன என்றும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதிலும், வறட்சியை எதிா்கொள்வதிலும் ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைப்பது முக்கியமான நடவடிக்கை என்றாா். இந்த ஏரியைச் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் பறவைகள் வந்து அமரும் வண்ணம் செயற்கை திட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புனரமைக்கப்பட்ட ஏரியை ஒசூா் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டா்பில்லா் நிறுவனம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

    இந்த விழாவில் நகராட்சி ஆணையா் பேசியது: ஒசூரில் உள்ள ஏரிகள் அனைத்தும், ஒசூா் மாநகராட்சி தொழிற்சாலை நிறுவனங்களுடன் இணைந்த சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில் செம்மைப்படுத்தி வருகிறது.

    இந்த தோ்ப்பேட்டை ஏரியைப் பராமரிக்கும் பணியை அடுத்த 3 ஆண்டுகள் கவனிக்கும். மேலும் சில ஏரிகளை இந்தத் திட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இந்த ஏரியைப் பயன்படுத்தி சுகாதாரச் சீா்கேடு விளைவிக்காமல் ஏரிகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றாா். இந்த விழாவில் ஒசூா் மக்கள் சங்கத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp