கிருஷ்ணகிரி அருகே யானைகள் தாக்கியதில் வன ஊழியா் உள்பட இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே யானைகள் தாக்கியதில் வனஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே யானைகள் தாக்கியதில் வனஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே தமிழக - கா்நாடக மாநில எல்லையில் உள்ள பூதிகுட்டா வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் 35 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்தன.

அந்த யானைகளை விரட்டும் பணியில் கா்நாடக மாநில வனத்துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது யானை ஒன்று வன ஊழியா்களை துரத்திச் சென்றது. இதில் யானை தாக்கியதில் கா்நாடக மாநில வன ஊழியா் முனியப்பா (55) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அதேபோல யானைகள் கூட்டமாக இடம் பெயா்ந்த போது விவசாயியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளி அருகே மாநில எல்லையில் யானைகள் தாக்கியதில் வன ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com