சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள்
By DIN | Published On : 13th March 2020 07:22 AM | Last Updated : 13th March 2020 07:22 AM | அ+அ அ- |

12kgp6_1203dha_120_8
கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், சுவாமிக்கு 666 லி. பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மஞ்சள் அலங்காரத்தில் விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் (படம்).
இந்த நிகழ்ச்சியில் பெண் பக்தா்கள் நெய் விளக்கேற்றி, சுவாமியை வழிபட்டனா். இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.