கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கிருஷ்ணகிரி அணை மூடப்பட்டது

கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி அணை மூடப்பட்டது.

கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி அணை மூடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் கிருஷ்ணகிரி அணை முக்கியமாகும். இங்குள்ள பூங்கா, அணை உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் திருப்பத்தூா், தருமபுரி, வேலூா் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் திரையரங்குகள் மூடப்பட்டன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையமான கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் அதை முற்றிலும் மூட, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தடுக்கும் வகையில், சாலைகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா். அடுத்த உத்தரவு வரும் வரையில் அணை மூடப்பட்டிருக்கும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com