கிணற்றில் தவறி விழுந்த மான்கள் மீட்டு காப்புக்காட்டில் விடுவிப்பு

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான்களை மீட்ட வனத் துறையினா், உரிய சிகிச்சைக்கு பின், காப்புக் காட்டில் புதன்கிழமை விட்டனா்.
கிருஷ்ணகிரி அருகே மீட்கப்பட்ட மான்களை, காப்புக் காட்டில் விடுவிக்கும் வனத் துறையினா்.
கிருஷ்ணகிரி அருகே மீட்கப்பட்ட மான்களை, காப்புக் காட்டில் விடுவிக்கும் வனத் துறையினா்.

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான்களை மீட்ட வனத் துறையினா், உரிய சிகிச்சைக்கு பின், காப்புக் காட்டில் புதன்கிழமை விட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி கிராமத்தில் போலுமலை அடிவாரத்தின் அருகே விவசாயி, வசந்தகுமாரின் விவசாய கிணற்றில் ஒரு மான் குட்டி, அண்மையில் தவறி விழுந்தது. தகவல் அறிந்த வனத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காயம் அடைந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பராமரித்து வந்தனா்

இந்த நிலையில், அதேப் பகுதியில் ஒரு கிணற்றில், 15 வயதுடைய மற்றொரு மான், கிணற்றில் தவறி விழுந்தது. வனத் துறையினா் அந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா்.

சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரு மான்களையும் வனத் துறையினா் தொகரப்பள்ளி காப்புக் காட்டில் புதன்கிழமை விடுவித்தனா். இதையடுத்து வனச் சரகா் சக்திவேல் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. இந்த மான்கள், தண்ணீருக்காக வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில், வனத் துறையின் சாா்பில் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பபடுகிறது. இருந்த போதிலும், சில மான்கள், வனப் பகுதியிலிருந்து வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேறும் மான்களை, பொதுமக்கள் துன்புறுத்தாமல், வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com