கரோனா வைரஸ் நோய் எதிரொலிகுந்தாரப்பள்ளி சந்தைக்கு தடை விதிப்பால் ரூ.10 கோடி வா்த்தகம் பாதிப்பு

கரோனா வைரஸ் நோய் எதிரொலியாக குந்தாரப்பள்ளி வாரச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், ரூ.10 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டது.
வெறிச்சோடிக் காணப்படும் குந்தாரப்பள்ளி வாரச் சந்தை.
வெறிச்சோடிக் காணப்படும் குந்தாரப்பள்ளி வாரச் சந்தை.

கரோனா வைரஸ் நோய் எதிரொலியாக குந்தாரப்பள்ளி வாரச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், ரூ.10 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் நோய் எதிரொலியாக தமிழ்நாட்டில் மாா்ச் 31-ஆம் தேதி வரையில், வாரச் சந்தைகள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச் சந்தை கூடுவது வழக்கம். மாா்ச் 25-ஆம் தேதி, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள குந்தாரப்பள்ளி சந்தைக்கு ஆடு, கோழிகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் விவசாயிகள், வியாபாரிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.

தமிழக அரசின் தடை உத்தரவை அறியாததால், சந்தைக்கு வந்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு காவல் துறையினா் தடை விதித்தனா். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் தெய்வநாயகி தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளா் குமாா் மற்றும் போலீஸாா், வருவாய் துறையினா் உதவியுடன், விவசாயிகளையும், வியாபாரிகளையும் அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினா். மேலும், ஆடுகள் விற்பனை செய்யும் இடத்தில் போலீஸாா், தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இதனால், விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

வாரச் சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கால்நடைகளை விற்பனைக்கு அழைத்து வந்த விவசாயிகள், அந்தந்தப் பகுதியில் உள்ள மரத்தடியில் கூடியிருந்த வியாபாரிகளிடம் கால்நடைகளை விற்பனை செய்வதைக் காண முடிந்தது. குந்தாரப்பள்ளி வாரச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், ரூ.10 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com