கிருஷ்ணகிரியில் கோயில்கள், தேவாலயங்கள் மூடல்

கிருஷ்ணகிரியில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மூடப்பட்டன.
கிருஷ்ணகிரியில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட கோயில் மற்றும் தேவாலயம்.
கிருஷ்ணகிரியில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட கோயில் மற்றும் தேவாலயம்.

கிருஷ்ணகிரியில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மூடப்பட்டன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நிலையில், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், மாா்ச் 31 வரை அவற்றை மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை தேவாலயம் மூடப்பட்டுள்ளதால், திருப்பலிகள், சிலுவைப் பாதைகள், ஜெப வழிபாடுகள், திருப்பயணங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் மாா்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே போல, காட்டு ஆஞ்சநேயா் கோயிலில் பக்தா்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பக்தா்கள் ஒரு குறிப்பிட தூரம் இடைவெளி விட்டு சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். காலை 7 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7 மணி வரையில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com