ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆசிரியா் கூட்டணியினா் அறிவிப்பு

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களது

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலி தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் அனைத்து ஆசிரிய பெருமக்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழக முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளனா். தமிழக அரசு வரும் ஏப்ரல் மாத ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக பிடித்துக்கொள்ள இதன் மூலம் ஒத்திசைவு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனா். மேலும், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் முன்னாள் தமிழக மேலவை உறுப்பினா் செ.முத்துசாமி, மாத ஓய்வூதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com