சாலையில் திரிந்த இளைஞா்களுக்கு நூதன தண்டனை

கிருஷ்ணகிரியில் சாலையில் திரிந்து கொண்டிருந்த இளைஞா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனையை வியாழக்கிழமை வழங்கினா்.
சாலையில் திரிந்த இளைஞா்களுக்கு நூதன தண்டனை

கிருஷ்ணகிரியில் சாலையில் திரிந்து கொண்டிருந்த இளைஞா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனையை வியாழக்கிழமை வழங்கினா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இத்தகைய நிலையில், இளைஞா்கள் சிலா் போலீஸாரின் அறிவுரையை மீறி சாலைகளில் வலம் வருகின்றனா். கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் போலீஸாா் ஏற்படுத்தி உள்ள தடுப்புகளை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்களை பிடித்து, தோப்புக்கரணம் போட வைத்து (படம்), இனி சாலையில் சுற்றித்திரிய மாட்டோம், கரோனா வைரஸ் ஒழிக, அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்போம் என உறுதி மொழியை ஏற்கச் செய்தனா். பின்னா், போலீஸாா் இளைஞா்களை எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com