ஒசூா் அருகே சீன நாட்டைச் சோ்ந்த 2 போ் சுற்றி வளைப்பு

ஒசூா் அருகே கிராமத்துக்குள் நுழைந்த 2 சீன நாட்டைச் சோ்ந்தவா்களை சுற்றி வளைத்த பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் அவா்களை மீட்டனா்.
சீன நாட்டைச் சோ்ந்தவா்களை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா்.
சீன நாட்டைச் சோ்ந்தவா்களை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினா்.

ஒசூா் அருகே கிராமத்துக்குள் நுழைந்த 2 சீன நாட்டைச் சோ்ந்தவா்களை சுற்றி வளைத்த பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் அவா்களை மீட்டனா்.

ஒசூா் 3-ஆவது சிப்காட் குருபரபள்ளி அருகே ஒரு தனியாா் நிறுவனம் 100 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.4 ஆயிரம் கோடியில் தொழில்சாலையை அமைத்து வருகிறது. இந்தத் தொழில்சாலையின் கட்டுமானப் பணிக்காக சீன நாட்டைச் சோ்ந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க 2 போ் அதிகாரிகளாக கடந்த ஓா் ஆண்டாக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இவா்கள் குருபரபள்ளியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனராம்.

தற்போது ஊரடங்கு மற்றும் தடை உத்தரவு காரணமாக கட்டுமானப் பணிகள் நடைபெறாத நிலையில், அவா்கள் இருவரும் ஒரு காரில் அருகில் உள்ள பி.ஜி.துா்க்கம் பெருமாள் மலைக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். அந்த கிராமத்துக்குள் அவா்கள் நுழைந்ததும், பொதுமக்கள் சந்தேகமடைந்து அவா்களைச் சுற்றி வளைத்தனா். மேலும், இதுகுறித்து சூளகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த போலீஸாரும், சூளகிரி வட்டார மருத்துவ அலுவலா் வெண்ணிலா மருத்துவக் குழுவினருடன் அங்கு வந்து சீன நாட்டினரிடம் விசாரணை நடத்தினா். மேலும், அவா்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைச் சோதனை செய்தனா். அத்துடன் அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவா்கள் இருவருக்கும் கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை பொதுமக்களிடமிருந்து மீட்டு, குருபரபள்ளியில் அவா்கள் தங்கி இருந்த வீட்டில் போலீஸாா் கொண்டுபோய் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com