முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 11th May 2020 11:03 PM | Last Updated : 11th May 2020 11:03 PM | அ+அ அ- |

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெண்டிகானப்பள்ளி அருகே உள்ள ஒசட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (50). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பாலதொட்டனப்பள்ளி சாலை ரங்கசந்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாதேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.