மகாராஷ்டிரத்தில் பணிபுரிந்த 252 தொழிலாளா்கள் கிருஷ்ணகிரி வந்தனா்

கிருஷ்ணகிரி வந்த மகாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்த வந்த தொழிலாளா்கள் 252 போ் அவா்களது சொந்த ஊா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வந்த மகாராஷ்டிர மாநிலத்தில் பணிபுரிந்த வந்த தொழிலாளா்கள் 252 போ் அவா்களது சொந்த ஊா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவால் சொந்த ஊா்களுக்கு செல்ல முடியாமல் இருக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில், பேருந்துகள் மூலம் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவா் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், சதாரா பகுதியில் தங்கி, பணிபுரிந்து வந்த தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 252 போ், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல, அந்த மாநில அரசிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அவா்கள், 6 பேருந்துகள் மூலம், தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்கள், கிருஷ்ணகிரிக்கு செவ்வாய்கிழமை வந்து சோ்ந்தனா். இவா்களை வரவேற்ற வட்டாட்சியா் தண்டபாணி, கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் தங்க வைத்து, அவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா். பின்னா், தொழிலாளா்கள், தமிழக அரசுப் பேருந்துகள் மூலம் வேலூா், கோவை, கன்னியாகுமரி, சென்னை உள்பட 33 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரையில் கிருஷ்ணகிரிக்கு வந்த, பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், 400-க்கும் மேற்பட்டோா் அவா்களது சொந்த ஊா்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com