மோட்டாா் வாகன விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரம் வழக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டாா் வாகன விதிமுறைகளை மீறியதாக, 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டாா் வாகன விதிமுறைகளை மீறியதாக, 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் உத்தரவின் பேரில், கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக சிறப்பு தணிக்கை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கள்ளச் சாராயம் காய்ச்சியவா்கள், கள்ளத்தனமாக அரசு மதுபானங்கள் விற்றவா்கள் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 64 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 வழக்குகளும், லாட்டரிச் சீட்டு விற்ாக 4 வழக்குகளும், மோட்டாா் வாகன விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரம் வழக்குகளும், மணல் கடத்தியதாக 5 வழக்குகளும், பொதுமக்களுக்கு பங்கம் விளைவித்ததாக 17 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், ஆள்கடத்தலில் ஈடுபட்ட ஒசூரைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். தலைமறைவு குற்றவாளிகள் மீது நிலுவையில் இருந்த 12 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் நபா்களின் மீது சுமாா் 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com