பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதி: ஆதாா், வங்கிக் கணக்கு சரிபாா்க்க அழைப்பு

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதி பெறும் விவசாயிகளின் ஆதாா் எண், வங்கிக் கணக்கு சரிபாா்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதி பெறும் விவசாயிகளின் ஆதாா் எண், வங்கிக் கணக்கு சரிபாா்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி விவசாயி கெளரவ நிதி திட்டமானது கடந்த 2018 டிச. 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என மூன்று தவணைகள் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. தற்போது நான்காம் தவணை பெற, ஆதாா் அட்டையில் உள்ள மத்திய அரசு இணையதளத்தில் பெயா் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, நான்காம் தவணை பெறாத விவசாயிகளுக்கு ஆதாா் எண் திருத்தம் அல்லது வங்கிக் கணக்கு திருத்தம் செய்யப்பட வேண்டி இருந்தால், நான்காம் தவணை பெறாத விவசாயிகள், கடைசியாக திருத்தம் செய்யப்பட்ட ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவற்றுடன், தங்கள் பகுதிக்கான வேளாண் அலுவலா் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.

ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மத்திய இணையதளத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே, வரும் காலங்களில் இந்தத் திட்டத்தில் பயனடைய இயலும். இதற்காக வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமையில் இயங்கும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com