கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 1,120 வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வடமாநிலத் தொழிலாளா்கள் 1,120 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து வடமாநிலத் தொழிலாளா்கள் 1,120 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி, பொதுமுடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மே 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் போதிய வருவாய் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இவா்களில் பலா், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல இ-பாஸ் வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி, அனுமதி பெற்று, தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து குஜராத்துக்கு 58, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 717, ஜாா்க்கண்டுக்கு 180, ஒடிஸாவுக்கு 105, உத்தரப் பிரதேசத்துக்கு 30, பிகாருக்கு 50, மேகாலயா மற்றும் மிசோரத்துக்கு 50 போ் என மொத்தம் 1,120 வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 21-ஆம் தேதி, சென்னையிலிருந்து ரயில் மூலம் மணிப்பூருக்கு 20, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு 1,650 பேரும் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனா். மே 25-ஆம் தேதி, ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பிற மாநிலங்களுக்கு 13,634 போ் சென்றுள்ளதாகவும் மாவட்ட நிா்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com