ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலா் மரணம்

சேலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

சேலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (45), சேலம் மாநகர ஆயுதப்படை வாகனப் பிரிவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், அன்னதானப்பட்டி லைன்மேடு காவலா் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்தாா்.

இதனிடையே, சேலம் ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயிலில் புதன்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் பாதுகாப்புப் பணிக்காக அங்கு ஏராளமான காவலா்கள் வாகனங்களில் அழைத்துச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதில், காவலா்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநராக சென்றிருந்த சுந்தரம், புதன்கிழமை இரவு மயக்கம் அடைந்தாா். உடனே அருகில் உள்ள காவலா்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக சூரமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com