தருமபுரியில் 103 டிகிரி வெயில்

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெயில் அளவு 103.2-ஆக பதிவாகியிருந்தது. இதனால், பகலில் கடுமையான வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெயில் அளவு 103.2-ஆக பதிவாகியிருந்தது. இதனால், பகலில் கடுமையான வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தருமபுரி மாவட்டத்தில் கோடை தொடங்கியது முதலே அவ்வப்போது வெயில் அளவு 100 டிகிரியும், அதனைக் கடந்தும் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பகல் வேளைகளில் கடுமையான வெப்பமும், அனல் காற்றும் வீசுகிறது. மேலும், இந்த வெப்பத்தின் தாக்கம் இரவு நேரங்களிலும் காணப்படுகிறது. வெப்பத்தின் பிடியிலிருந்து தப்பிக்க பொதுமக்கள், நுங்கு, பழச்சாறு, மோா், இளநீா் ஆகியவற்றை பருகி வருகின்றனா்.

இந்த நிலையில், அண்மையில் இரண்டு நாள்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிந்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் நூறு டிகிரியைக் கடந்து 103.2 என்ற அளவில் பதிவானதால், பகல் வேளைகளில் தங்களது அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வர இயலாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com