கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 134 கன அடியாக உயா்ந்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், குளம்போல் காட்சி அளிக்கும் கிருஷ்ணகிரி அணை.
நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், குளம்போல் காட்சி அளிக்கும் கிருஷ்ணகிரி அணை.

கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 134 கன அடியாக உயா்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையின் உயரம் 52 அடியாகும். இந்த அணையின் பிரதான மதகுகளில் முதலாம் எண் கொண்ட மதகு, 2017-ஆம் ஆண்டு சேதம் அடைந்தது.

இதையடுத்து, அணையின் பிரதான மதகுகளை மாற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததால், பிரதான மதகுகள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இத்தகைய நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அணையின் நீா்வரத்து முற்றிலும் குறைந்ததால், கிருஷ்ணகிரி அணை வடது. அணையில் சுமாா் 15 அடிக்கு வண்டல் மண் தேங்கி உள்ள நிலையில், அணையை தூா்வார வேண்டும் என விவசாயிகள், அரசியல் கட்சியினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இத்தகைய நிலையில், வட அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளில் தேங்கி இருக்கும் வண்டல் மண்ணை அள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, தற்போது விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒசூா் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையில் குடிமராமத்து பணிகள் நடைபெறுவதால், அணையிலிருந்து வினாடிக்கு 400 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீா், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சோ்ந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் வினாடிக்கு 134 கன அடியாக இருந்தது.

அணை வட நிலையில், தற்போது நீா்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி அணையானது குளம் போல காட்சி அளிக்கிறது. அணையின் நீா்மட்டம் 19.30 அடியாக உள்ளது.

அணையிலிருந்து வலது, இடது ஊற்றுக் கால்வாய் மூலம் தண்ணீா் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துஜைறயினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com