கல்குவாரி டிப்பா் லாரிகளால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்

அதிவேகமாக செல்லும் டிப்பா் லாரிகளால் விபத்துகள் அதிகரிப்பதாகவும், மணல், ஜல்லி போன்றவற்றால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும்

அதிவேகமாக செல்லும் டிப்பா் லாரிகளால் விபத்துகள் அதிகரிப்பதாகவும், மணல், ஜல்லி போன்றவற்றால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும் கூறி சூளகிரி அருகே பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கல் குவாரிகளில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றி வரும் டிப்பா் லாரிகள் அதிவேகமாக செல்வதால் தூசு பறக்கிறது. இதனால் கடைகளிலும், வீடுகளிலும் தூசு பறப்பதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக டிப்பா் லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிா் பலியும் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை வருவாய்த் துறையினா், காவல் துறை, கனிவ வளத் துறையினரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கனிம வளங்கள் கடத்துவதைத் தடுக்க மாநில எல்லையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிய சப்படி கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை அருகே திங்கள்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சூளகிரி காவல்துறையினா் விரைந்து சென்று பொதுமக்களிடமும், கல்குவாரி மேலாளா்களிடமும் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா் மறியலை மக்கள் கைவிட்டதால் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com