காவேரிப்பட்டணத்தில் கரோனா விழிப்புணா்வு

காவேரிப்பட்டணத்தில் தெருக்கூத்து கலைஞா்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவேரிப்பட்டணத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வை மேற்கொண்ட தெருக்கூத்து கலைஞா்கள்.
காவேரிப்பட்டணத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வை மேற்கொண்ட தெருக்கூத்து கலைஞா்கள்.

காவேரிப்பட்டணத்தில் தெருக்கூத்து கலைஞா்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட தெருக்கூத்து கலைஞா்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சாா்பில் நாட்டுப்புறக் கலைஞா்கள், நாடக கலைஞா்களின் பங்களிப்புடன் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு, காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு நிகழ்வை, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், தொடங்கி வைத்தாா். காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், வட்டார மருத்துவ அலுவலா் ஹரிராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது.

இந்த விழிப்புணா்வு நிகழ்வில், நாடக கலைஞா்கள், நாதஸ்வரம், தவில், பம்பை, பேண்டு இசை, தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மாடு, மயில், பொய்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், உருமி சேவையாட்டம், காளி அம்மன் நடனம் உள்ளிட்ட கிராமிய கலைஞா்கள் பல்வேறு கலை குழுக்களாகப் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தெருக்கூத்து கலைஞா்களின் முன்னேற்ற நலச்சங்க தொடக்க விழா, கலைஞா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com