குட்டப்பள்ளி கிராமத்தில் நடமாடும் நியாயவிலை கடை தொடக்கம்

வேப்பனப்பள்ளியை அடுத்த குட்டப்பள்ளி கிராமத்தில் நடமாடும் நியாயவிலை கடையை முன்னாள் எம்.பி. அசோக்குமாா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
குட்டப்பள்ளி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையை தொடக்கி வைத்த முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கோடிப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட குட்டப்பள்ளி கிராமத்தில் 102 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களின் வசதிக்காக, கிராமத்துக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்காக நடமாடும் நியாயவிலைக் கடையை முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், தொடக்கி வைத்து, அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

குந்தாரப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் இந்தக் கிராமத்துக்கு ஒவ்வொரு செல்வாய்க்கிழமை அன்றும் வாகனத்தில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் முனியப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் தில்லையரசி சரவணன், கூட்டுறவு வங்கிச் செயலாளா் பாலகிருஷ்ணன், தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com