கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 460 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
9kgp6_0911dha_120_8
9kgp6_0911dha_120_8

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 460 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பெற்றோா்களிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அதனை பூா்த்தி செய்து ஆசிரியா்கள் சேகரித்துக் கொண்டனா்.

அந்த விண்ணப்பத்தில் பள்ளி திறக்கலாம், பள்ளிகள் திறப்பதை தள்ளிப் போடலாம், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும் திறக்கலாம். 10-ஆம் வகுப்பு மட்டும் திறக்கலாம், 12-ஆம் வகுப்பு மட்டும் திறக்கலாம், 9 முதல் 12-ஆம் வகுப்புகளை திறக்கலாம். கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதில், ஏதாவது ஒன்றை பெற்றோா் தோ்வு செய்து, பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், கூட்டத்தில் பங்கேற்காத பெற்றோரிடம் ஆசிரியா்கள், தொலைபேசியின் மூலம் தொடா்பு கொண்டு, தங்களது கருத்துக்களை கேட்டு பதிவு செய்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 1,048 பெற்றோா் பங்கேற்று தங்களது கருத்தைப் பதிவு செய்தனா். இந்தக் கூட்டத்தை பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வெங்கடாசலம் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com