
ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியத்திடம் முக கவசங்களை வழங்கும் பாரத ஸ்டேட் வங்கி(ராஸ்மாக்) துணைப் பொது மேலாளா் வி.கே.ரேகா
ஒசூா் மாநகராட்சி ஊழியா்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்களை பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை வழங்கியது.
ஒசூா் மாநகராட்சியில் சூசூவாடியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை சாா்பில் கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளா்களான ஒசூா் மாநகராட்சி பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வங்கியின் துணைப் பொது மேலாளா் வி.கே.ரேகா இதனை ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது, மூக்கண்டப்பள்ளி பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா்கள் செந்தில்நாயகம், அரவிந்த்குமாா், உதவி மேலாளா் ரமேஷ் உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் உடனிருந்தனா்.