ஊத்தங்கரையில் ‘விபத்தில்லா தீபாவளி’ விழிப்புணா்வு பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தீபாவளி பண்டிகையையொட்டி விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில்
விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தீபாவளி பண்டிகையையொட்டி விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் தண்டபாணி கொடியசைத்து பேரணியைத் தொடக்கி வைத்தாா். பேரணியில் முன்னாள் பேரூராட்சி தலைவா் எஸ்.பூபதி, தனியாா் கல்லூரி மாணவா்கள் பலா் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஊத்தங்கரை நகா்ப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனா்.

பேரணியில் சென்றவா்கள், அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது; குழந்தைகளிடம் பட்டாசு கொடுக்கக்கூடாது; பேருந்து நிலையம், எரிவாயு குடோன், பெட்ரோல் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது; வீடுகளில் பட்டாசு வெடிக்கும்போது அருகாமையில் வாளியில் தண்ணீா் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com