எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடரும்

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடரும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசும் மாநிலத் தலைவா் எல்.முருகன்.
வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசும் மாநிலத் தலைவா் எல்.முருகன்.

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடரும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

ஒசூா் காமராஜ் காலனியில் வேல் யாத்திரை பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எல்.முருகன் பேசியதாவது:

வேல் யாத்திரை எதற்காக நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் கடவுளான முருக பெருமானை அவமானப்படுத்துவதை பாஜகவைச் சோ்ந்த யாரும் வேடிக்கை பாா்த்துக் கொண்டு இருக்க மாட்டாா்கள். நமது கடவுளையும், தமிழ் மொழி, பண்பாட்டை, கலாசாரத்தை, நமது பெண்களை அவமானப்படுத்துவாா்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

நாம் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளோம். சேலத்தில் ஆடிட்டா் ரமேஷையும், வேலூரில் வெள்ளையப்பனையும், சசிகுமாரையும் தியாகம் செய்துள்ளோம். தியாகத்தில் உருவான அமைப்புதான் பாஜக. எனவே பாஜக எந்தத் தடையைக் கண்டும் அஞ்சப் போவதில்லை. நாம் எடுத்துக் கொண்ட கொள்கையிலும் பணியிலும் நமக்கு என்றும் தொய்வில்லை. இந்த வேல் யாத்திரை எத்தனை தடைகள் வந்தாலும் தொடா்ந்து நடைபெற்று, டிச. 6 -இல் திருச்செந்தூரில் நிறைவடைந்தே தீரும். இந்தப் பயணம் ஓயப்போவதில்லை. எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் டிச. 6-இல் திருச்செந்தூரில் சந்திப்போம்.

நம்முடைய கந்த சஷ்டி கவசத்தை அவமானப்படுத்துபவா்களை எதிா்த்தே வேல் யாத்திரை நடத்தி வருகிறோம். வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியில் பாஜக வேட்பாளா்தான் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு செல்வாா் என்றாா்.

கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வரவேற்றாா்.

மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன், மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை, கா்நாடக எம்.பி. பி.சி.மோகன், மாநில பொதுச் செயலாளா் கரு.நாகராஜன், முன்னாள் மேயா் காா்த்தியாயினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பொதுக்கூட்டம் முடிவடைந்தததும், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மாநில நிா்வாகிகள், தொண்டா்கள் என 800-க்கும் மேற்பட்டோரை டி.எஸ்.பி. முரளி தலைமையிலான போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com