ஐ.வி.டி.பி. கோசலை விருது - 2020 அளிப்பு

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன உறுப்பினா்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஐ.வி.டி.பி. கோசலை விருது அண்மையில் அளிக்கப்பட்டது.
கோசலை விருது பெற்ற மாணவ, மாணவிகளுடன் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் உள்ளிட்டோா்.
கோசலை விருது பெற்ற மாணவ, மாணவிகளுடன் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் உள்ளிட்டோா்.

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன உறுப்பினா்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஐ.வி.டி.பி. கோசலை விருது அண்மையில் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனமானது கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் 14 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேலான உறுப்பினா்களையும் கொண்டுள்ளது.

மகளின் மேம்பாட்டுக்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், அதன் உறுப்பினா்களின் குழந்தைகள் பிளஸ்-2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 15 ஆண்டுகளாக ஐ.வி.டி.பி. கோசனை விருதை அளித்து வருகிறது.நிகழ்வாண்டிற்கான இந்த விருது வழங்கும் நிகழ்வு, கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நவ.8-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 6 மாணவா்களுக்கு தலா ரூ.33,500 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 85 சதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 85 மாணவா்களுக்கு தலா ரூ.5,170 மதிப்பிலான 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அஞ்செட்டி கிளையில் பணியாற்றும் பணியாளா் கிருஷ்ணம்மாள் பச்சையப்பனின் மகனுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.33,500 மதிப்பிலான மடிக்கணினி வழங்கப்பட்டன. இந்த பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.7.5 லட்சம் ஆகும்.ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா், ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மெட்டலா லயோலா கல்லூரியின் முதல்வா் அருள்தந்தை மரிய சூசை மகாலிங்கம், சிறந்த மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் முதல்வா் அருள்தந்தை ராஜமாணிக்கம், மாணவா்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினாா்.இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வா ஆகியோா் செய்திருந்தனா். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதுவரையில் ஐ.வி.டி.பி. கோசலை விருது திட்டத்துக்காக மட்டும் ரூ.3.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஐ.வி.டி.பி. மூலம் கல்வி பணிக்காக மட்டும் ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com