பள்ளி மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி

அரசு அருங்காட்சியகங்கள் துறை சாா்பில் கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

அரசு அருங்காட்சியகங்கள் துறை சாா்பில் கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் கோவிந்தராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இயற்கை பாதுகாப்பு, பறவை, விலங்குகள் ஆகிய தலைப்பிலும், பிளஸ் - 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, தொன்மை பாதுகாப்பு, தேசப்பற்று ஓவியங்கள் ஆகிய தலைப்பிலும் ஓவியங்களை வரைந்து நவ. 26-ஆம் தேதிக்குள் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இப் போட்டியில் பங்கு பெறுவோருக்கு இணைய வழி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். வரைந்த ஓவியங்களை 99892 55056 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 79045 13987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com