சாலை விபத்து: வடமாநில தொழிலாளி பலி
By DIN | Published On : 17th November 2020 12:30 AM | Last Updated : 17th November 2020 12:30 AM | அ+அ அ- |

மத்திகிரி அருகே இருசக்கர வாகனம் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமது சாதிக் (19). இவா் ஒசூா்- மத்திகிரி, அந்திவாடியை அடுத்த பாலாஜி நகா் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். அவா் ஒசூா்- தளி சாலையில் அந்திவாடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியதில் முகமது சாதிக் பலத்த காயம் அடைந்தாா். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்து விட்டாா்.
இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.