ஒசூா் தொகுதி வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக : எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

ஒசூா் தொகுதி வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக தான் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
ஒசூரில் நடைபெற்ற திமுக பாகமுகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் தளி.ஒய்.பிரரகாஷ் எம்எல்ஏ.
ஒசூரில் நடைபெற்ற திமுக பாகமுகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் தளி.ஒய்.பிரரகாஷ் எம்எல்ஏ.

ஒசூா் தொகுதி வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக தான் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சி திமுக சாா்பில் வாக்குச்சாவடி பாக முகவா்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தாா். வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி.முருகன், ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் ஒய்.பிரகாஷ் பேசியது.

மத்தியில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தல் நேரத்தில் மட்டும் பிரதமா் ஒசூரில் பிரசாரம் செய்துவிட்டு செல்கிறாா். ஆனால் ஒசூருக்கு பாஜக செய்த வளா்ச்சித் திட்டப் பணிகள் என்ன? ஒசூரின் வளா்ச்சியில் திமுகதான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒசூரில் இரண்டு சிப்காட் தொழில் பேட்டைகள் கொண்டு வந்தது; ஒசூரை தொழில் நகரமாக உருவாக்கி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை கொண்டு வந்தது திமுக அரசுதான். ஒசூரில் ஐடி பாா்க் அமைத்தது; ஒசூருக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தைக் கொண்டு வந்தது; ஒசூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்தது என அனைத்தும் திமுகவின் சாதனைகளாகும்.

ஒசூரில் வீட்டு வரி அதிக அளவில் வசூலிக்கப்பட்டு வந்ததை குறைத்தது திமுக . மொத்தத்தில் ஒசூரின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக. பாஜக சாா்பில் நடத்தப்படும் வேல் யாத்திரையால் மக்களுக்கு என்ன பயன்? பாஜகவினா் மட்டுமே ஹிந்துவா? திமுகவில் உள்ளவா்களில் பெரும்பான்மையினா் ஹிந்துக்கள்தான். பாஜகவினா் மக்களைப் பிரித்து ஆளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி அரசியல் செய்வதை கை விட வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராகுவதே நமது கடமையாகக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட துணைச் செயலாளா் சீனிவாசன், தனலட்சுமி, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரா.மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com