கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்பு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியல்

கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்பு (டிவைடா்) அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வாகன பழுது நீக்குவோா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்பு (டிவைடா்) அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வாகன பழுது நீக்குவோா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பழைய கிளைச் சிறை சாலை, பெங்களூரு சாலை, காந்தி சாலைகளின் மையப் பகுதியில் தடுப்பு (டிவைடா்) அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்ட பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். சென்னை சாலையில் இந்த பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி வட்டச் சாலையிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை வரையிலும் மைய தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பெரிய மாரியம்மன் கோயிலிருந்து அங்குள்ள பெட்ரோல் விற்பனை மையம் வரையிலும் மைய தடுப்புச் சுவா் அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாகன பழுது நீக்குவோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

ஆனால், நெடுஞ்சாலைத் துறையினா், இவா்களது கோரிக்கையை ஏற்க மறுத்து பணிகளைத் தொடங்கினா். இதனால் ஆத்திரமடைந்த வாகன பழுது நீக்குவோா், சென்னை சாலையில் லாரியை குறுக்கே நிறுத்தி செவ்வாய்க்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளா் கணேஷ் குமாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com