மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மாற்றுத்திறனாளிகள்.
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மாற்றுத்திறனாளிகள்.

தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றியத் தலைவா் சீனிவாசன் தலைமை தாங்கினாா். மாவட்ட துணைச்செயலாளா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் மாரப்பா விளக்க உரையாற்றினாா். விவசாய சங்கம் சாா்பில் வெங்கடேஷ் பேசினாா். மாவட்ட விவசாய சங்கத் தலைவா் சேகா் சிறப்புரையாற்றினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பராமரிப்புத் தொகையான ரூ. 3 ஆயிரத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறைகளில் 5 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாதேவய்யா நன்றி கூறினாா்.

ஊத்தங்கரையில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் திருப்பதி, ஒன்றியச் செயலாளா் எத்திராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் அண்ணாமலை கண்டன உரையாற்றினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com