தினமணி செய்தி எதிரொலி: சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் உடல் 16 நாள்களுக்கு பின் புதைப்பு

ஜவளகிரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டு, அடக்கம் செய்யாததால் துா்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த யானையின் சடலம் 16 நாள்களுக்குப்பின் வனத்துறையினரால் புதைக்கப்பட்டது.

ஜவளகிரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டு, அடக்கம் செய்யாததால் துா்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த யானையின் சடலம் 16 நாள்களுக்குப்பின் வனத்துறையினரால் புதைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரியை அடுத்த சென்னமாளம் கிராமம் அருகே கடந்த 3-ஆம் தேதி 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்த பின் புதைக்காமல் அப்படியே விட்டுச் சென்று விட்டனா்.

கிராமப்பகுதியையொட்டி இருந்ததால் யானையின் சடலம் அழுகியதில் கடும் துா்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த 17-ஆம் தேதி விரிவான செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, யானையின் உடலை முறையாக புதைக்க மாவட்ட வன அலுவலா் பிரபு உத்தரவிட்டாா். அதன்பேரில் வன ஊழியா்கள், அங்கு சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டி, இறந்து போன குட்டி யானையின் உடல் முறையாகப் புதைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் கிருமிநாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com