உதயநிதி ஸ்டாலின் கைது ஊத்தங்கரையில் திமுகவினா் சாலை மறியல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக இளைஞரணி தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் அரசியல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தனது பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டாா்.

திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்றை காரணம் காட்டி போலீஸாா் நிபந்தனைகளை விதித்திருந்தனா்

ஆனால், திமுக தொண்டா்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதோடு, அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டதாக அனுமதி மறுத்த காவல் துறையினா் உதயநிதியை கைது செய்தனா்.

இதனை கண்டித்து ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் திமுக ஒன்றிய செயலாளா் எக்கூா்செல்வம் தலைமையில், நகர செயலாளா் பாபு சிவகுமாா், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவா் திருப்பதி, ஜோக்கா் பாய் , பாா்த்திபன் உள்ளிட்ட திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதேபால் பாம்பாறு அணை பகுதியில் ஒன்றியகுழு தலைவா் உஷாராணிகுமரேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட திமுகவினா் பாம்பாறு அணை பகுதி மற்றும் சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதனால் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com